Friday, 7 September 2012



நமது 
தவறான எண்ணங்களே நமது 
நன்மைகளை தடுக்கும்..            கட்டளைகளை பிறப்பிக்கும், அதிகாரமாக மாறி, 
பின். மாற்ற முடியாத சூழலை உருவாக்கி, உள்ளத்தை முன் இருந்த நிலையை விட மிக மோசமாக்கச் செய்து,
அந்த 
மோசமான சூழளிலிருந்து 
மீண்டும்,
நமது எண்ணங்களை 
சரியான பாதைக்கு திருப்ப முடியாமல், 
மேலும். 
மேலும், 
நம் நன்மைகளை தீமைகள் என்றும்,
நமக்கு சாத்தியமில்லை என்றும்,
நம் காலம் கடந்து விட்டது என்றும்,
இனி வழியே கிடையாது என்றும்,
எல்லாம் அவன் விதித்தது என்றும்.
இவ்வாறு,
உண்மைக்கு எதிரான பாதையில் 
விழுந்திருக்கும் பட்சத்தில்....


நமதெண்ணங்கள்.. 
படித்தால் தான் அறிவு வளரும்.
அறிவு வந்தால் தான் வேலை கிடைக்கும், 
வேலை வந்தால் தான் செல்வம் பெருகும், 
செல்வம் வந்தால் தான்... 
திருமணத்திற்கு பெண் தருவார்கள். 
அந்த பெண்ணும் வேலைக்கு சென்றால்...
இன்னும் செல்வம் சேரும்.
சேர்ந்தால் தான் 
குழந்தைகள் பெரிய கல்வி கூடங்களில் 
பயில முடியும்...
அப்படி 
அங்கு, 
சேர்ந்தால் தான் மற்றவர்களைவிட 
மேலும் 
அறிவு வளரும்.
வளர்ந்த பின்,
இப்படி.... 
மென்மேலும் நமக்குண்டான அழிவுபாதைகளிலேயே... 
நம்மை 
விரும்பி அழைத்துச்செல்லும் துர்பாக்கிய நிலைக்கு,
நாமே 
நமதெண்ணங்களை 
பழக்கி 
பாழ் படுத்திய நிலைக்கு, 
மிக 
முக்கிய காரணங்களில் முதன்மையானது...
நம் மனதின் ஆசையை உணராதது.
நமதுள்ளம் கூறும் 
நற்சொற்க்களை கேளாதது.
பெரியவர்கள்- - முதிர்ந்தவர்கள் - அறிவாளிகள் - அனுபவமிக்கவர்கள் - வளர்ந்தவர்கள் - சாதித்தவர்கள் - வயது வந்தவர்கள் - 
நன்றாக வாழ்ந்தவர்கள் 
என்ற,ஒரு திரை கொண்டு அவர்கள்,கூறும்...எல்லா கருத்துக்களையும்.
ஏன்?என்று,சிந்தித்துணராத - செக்கு மாட்டின் மரபினராகி
நாம்
ஏற்றுக்கொண்டவை.அனைத்தும் நமதெண்ணங்களில் 
செயல் விடை தன்மைகளாக மாறி.. 

நமக்கே 
அனுபவமாக உணரப்பட்டு வருகிறது.
பூட்டி வைப்பது-தவறு என்றோம்.
 பின்-ஒரு சூழலில், 
நமக்கு,சுகம் தந்து 
எல்லா 
பணிவிடையும் புரிந்து  
நமக்காகவே...வாழ்வை, 
தவமென கொண்டவளை,
இராணி என்றும்
மகாராணி என்றும் 
புகழ்ந்து 
அரண்மனைக்குள்ளே வைத்தலை 
கௌரவம்  என்றோம். 
உலகம் தெரிய 
அனைத்தும்கற்று வா- 
நீயும் 
ஆணுக்கு இணை என்றோம். 
ஊதாரித்தனமான பொறுப்பில்லாமல்..
பெண்ணை வெளியில் விட்டு 
பண்பாட்டை,
கலாச்சாரத்தை 
சீர்குழைகிறான் என்றோம்...  

பூட்டி வைத்தலை கட்டி காப்பதென்றும்..
கட்டி காப்பதை கட்டிலறைக்கு மட்டும் என்றும் - கட்டிலறையை - 
தொட்டிளுக்கான தொழிற்ச்சாலை என்றும்.. தொழிற்ச்சாலைகளில் கூட 
அதாவது 
இயந்திரத்தனமான தொழில்களில்... 
பெண்களை வேலைக்கு அமர்த்தி,
என
விவேகமற்ற செயல்கள் வரை 
துணிந்து விட்டோம்.
இதற்கு
எண்ணித் துணிக கருமம். 
என்ற 
சொற்ச்சொடரை  
வேலியாக பயன்படுத்தியும் கொண்டோம்.
பார்க்கும் நிலத்தையும்...பாயும் நதியையும் பெண்ணென்றே பாவித்தோம்.. 
தாயை மதித்தோம்.
இறைநிலைக்கொப்பானதென்றே
தாயை
உயர்த்தி வழி நின்றோம்.
பின் தாரமும்,தாயுக்கு இணை என்றோம்.
வந்த வழிக்காக 
அல்லது 
வரும் வழிக்கு 
என்ற 
நோக்கம் மறந்து,
அவ்வக்கால சூழல்-செயலுக்கேற்ப
மறந்து,மறைந்து,மறைத்து... 
இவ்வாறான,
அனைத்துமே... 
நம் வாழ்க்கை நெடுகிலும் நோயாகவும், 
வறுமையாகவும்.... 
மாறி மாறி நம்மை காயப்படுத்தி தோற்கடிக்கும், எல்லாச் சூழலையும்... 
நாமே விதைத்தோம்.
ஆதலால் 
நோய் என்றால் கண்டிப்பாக வரும்.
என்று 
நாமே தீர்மானித்து திட்டம் வகுத்து 
மருத்துவத்தை உருவாக்கினோம்.. 
அடுத்து 
நோய் வந்ததால் குணமாகாது 
என்பதையும் 
நாமே வகுத்து கொண்டோம்.
வயதானால்...
சோம்பல் வரும்.
உடல்நலம் குன்றும்.
எனவும்,
உடல் சுகம் தேடும் காலங்களில் 
கல்வி என்றும் 
கடமை என்றும் 
காலம் கடத்தி..., 
இவ்வாறான 
தொலை தூர 
சிக்கல் சிறையிலிருந்து 
விடுபட 
இன்று முதல் 
நான் அறிந்த வழிகளில் நீங்களும் சந்தோசமாக 
மன மகிழ்வோடு 
பேரானந்த - பேராற்றலை பெறுவதற்கு,
சில வழி முறைகள்.
சில வழி முறைகள் என்றாலே 
உடனே 
நாம் பயிற்சிளுக்கு தயாராகிவிடுவோம்.
பயிற்சிகள் என்றால்? 
அறிவற்ற உயிர்களுக்குதான் பயிற்சி.
அதாவது... 
பாம்பாட்டி,பாம்பிற்கு தருவது பயிற்சி 
அதே நிலை தான் 
குரங்கு வைத்து வித்தை காட்டுவதற்கும்.
உடம்பிற்கு தெம்ப்பூட்ட 
யோக பயிற்சி என்றும், 
அமர்ந்து கண்களை மூடி - மூச்சிழுத்து 
என்று 
தியானத்தையே சமாதி நிலைக்கு 
கொண்டு சென்று 
அதாவது 
ஜடப்பொருளாக்கி, 
அதனையே அமைதி என்றும்,
மறுத்தளித்த 
சூழலில் நின்றும்.. 
சிந்தித்துனர்வதே 
நம் வழிமுறை.
அதாவது, 
நம் நோக்கமென்ன? 
என்பதின் விழிப்புணர்வே... 
அது.
ஆம்,
அது
அடங்காதது.
அளப்பரியது-அளவில்லாதது
அழிவற்றது-ஆழமானது.
ஆம் 
அதுவே நமது ஆழ்மனது. 
ஆழ்மனம் அற்புத சக்தி நிறைந்தது.
நிறைவுடயது.
நிலையானது 
நேர்மையானது  
நிகரற்றது .. 
இந்த பேருண்மைகளை உணர்ந்து கொண்டால் நமக்கும் நம் பிரம்பஞ்சத்திர்க்குமான 
தொடர்பே இந்த ஆழ் மனம் தான் என்ற மாபெரும் இரகசியம் விளங்கும்.

அதற்க்கு முன் 
நம் 
விழிப்புணர்வை பலப்படுத்த வேண்டும் 
அதாவது . 
நம் நோக்கம்
அமைதி தேடுவதா? ஆனந்தம் அடைவதா?
மூச்சை  நிறுத்தி-இழுத்து
நமக்கு நாமே வித்தை காட்டுவதா?
விந்தை புரிவதா? 
அல்லது
விந்தை கட்டி,
உடலை பலப்படுத்தி 
உணர்வை மழுங்கடிப்பதா? 
உலகின்-வயது-காற்றின்-ஈரப்பதம்-
சூரியனின்-சுற்றளவு-வெப்பத்தின் வேகம்- 
காகிதம் கண்டுபிடித்தல்- 
மின்சாரம் தயாரித்தல்.

வெங்கலப்பரிசு - விண்கல சொகுசு  
என்ற பகுத்தறிவின் பாதைகளை விடுத்து. 
நம் தேவை ஆனந்தம்-மகிழ்ச்சி-இன்பம்.
இவைகளின் 
கூட்டு நிகழ்வான குதுகலம்.
இவை என்றென்றும் 
நம் மனதில் 
நிரந்தரமாக 
மகிழ்ச்சியுற 
நிலைக்க வேண்டுமென்பதே நம் விழிப்புணர்வு. அதாவது 
வெற்று தத்துவங்களை 
உதாரணமாக,
நிலையாமை திரை போர்த்தி 
நம்மை குழப்பும் தத்துவங்களை 
நம் எண்ணங்களில் 
நின்று அழித்தலே விழிப்புணர்வு.
மாற்றம் மட்டுமே மாறாதது,
போன்ற
உயர்ந்த சிந்தனை 
என்று கருதும் எல்லாமும் கீழானவையே...
நமக்கும். 
நம்மை படைத்த 
அந்த மகத்தான சக்திக்கும்.

திறன்பட  எடுத்தியம்புகிறேன்.. ஒன்றை தெளிவாக, நேரம் காலம் 
என்ற வரைமுறையில், 
நாளை என்ற 
அவநம்பிக்கையை அறுத்தெரிவோம்
இன்று 
இக்கணம் மட்டுமே இறை.
இவை 
நம் மனமே.
மனம் மாறினால் எல்லாம் மாறும்.
மாறாத
மனதை தயார் படுத்த...
அதாவது
நம் மனமே, தந்த அற்புத பரிசு  
நம் எண்ணங்கள்.
அவ்வெண்ணங்களின் வாயிலில் நின்று 
நாம் விழிப்புணர்வுடன் 
இருத்தலே தவம்.
தவத்திற்கான வழிமுறைகள் 
ஒன்று, 
நம் இயல்பு.
மற்றொன்று, 
மற்றொன்று-என்று,ஒன்று-இல்லை 
என்பதே 
மற்றொன்று.
நமதியல்புக்கொத்த-சிந்தனையை 
அறிவது எப்படி?வளர்ப்பது எப்படி,
என்றால் 
எப்படி?என்ற 
இந்த 
வினா எழும்பும் பழக்கத்தை கைவிடுதலே,
நமதியல்பு.

உதாரணத்திற்க்கு
நாம் மூச்சு காற்று இல்லாவிடில் நாம் மரணித்து விடுவோம்.
எனில்,
மூச்சுக்காற்று எங்கு உருவானது? 
எவ்வாறு நம்மிடம் வருகிறது?
ஏன் சுவாசிக்க வேண்டும்?என்றா நாம் சுவாசித்தோம்?.-
என்ற, 
எந்த- 
ஒரு,வினாவும்-இன்றியே எல்லாமும்.
இதுவே நமதியல்பு.
அதாவது,
உறிதல் என்ற செயலுக்கு அழுத்தம் என்ற,
ஒரு நிலை வேண்டும் 
அழுத்தம் என்ற இயல்புக்கு 
ஊக்கம் என்றொரு முயற்சி வேண்டும்.
அம்முயற்சி என்ற தேவைக்கு 
விருப்பம் என்ற உணர்வு வேண்டும். 
இதனை கற்றுணர்ந்து,
எந்த குழந்தையும் 
தாயின் மார்பில் 
உறிஞ்சி பால் அருந்துவது கிடையாது.
                                 இதுவே இயல்பு. அதுவே        அருந்தவம்.
அந்த 
அருட்பெருஞ்செயலின்
செயலை தீர்மானித்து 
திறம்படசெய்து முடிக்கும் ஒரே திறன்.
அந்த 
தாயின் ஆழ் மனம் ஒன்றேயன்றி வேறில்லை. 
என்றுணர்வதே விழிப்புணர்வு.
இந்த 
விழிப்புணர்வின் விரிவு நிலை
சற்று விளக்கமாக,
நீங்கள் மலைக்காமல் அறிய 
சற்று எளிமையாக.
அந்ததாயின்,
அடிப்படை நம்பிக்கை 
அதனளவில் மட்டுமே.
காரணம்,
அந்த தாயும்
அவளின் ஆழ்மனசக்தியை 
அதாவது 
சீர்பெருமந்த 
சிதம்பர,ரகசியத்தை
அறியாததால் 
அளவு குன்றுகிறது.
அவ்வளவே. 
அவள் எண்ணத்தை மாற்றி,
அதாவது 
எந்த 
குறுக்கீடுகளும், 
அதாவது 
அவநம்பிக்கைகளும் இல்லாமல் 
மனதின் துணை கொண்டு,
எனக்கு 
அடுத்த குழந்தை 
இப்பொழுதே வேண்டும்.
என்ற 
விருப்பம் தீவிரமாயின்... 
இயல்பிலேயே-கடும் சிரத்தை 
தும் இன்றி, 
நம்புவாராயின்...,
நிச்சயம் 
ஒரு 
கரு உருவாகும்
பின், 
குழந்தை வரும்.
இதுவே 
புராணத்திலும், 
உதாரணத்திலும்.
புராணம் என்ற புதினத்திற்கு உள்ளார்ந்த ஒரு அர்த்தம் உருவாகுமாயின் அதுவே இயல்பு. 

எதுவாக மாற விரும்புகிறாயோ?
அதுவாகவே மாறுவாய்.
இந்த 
மாற்றம் உலக நியதியாகும்.
அதாவது,
அகமே புறம்;
புறமே அகம்;
அதாவது...
மேலுள்ளவையே கீழ்;
கீழுள்ளவையே மேல்;
இவைகளை 
விழிப்புணர்வின்றி,
நாம் 
புரிந்து கொண்டதாலே... 
மாற்றங்கள் மட்டுமே மாற்ற முடியாது.
என்று,
நம் கட்டளைகளை 
நமக்கெதிரான...
அதிகாரமாக உருமாற்றி,
வாழும் தேவையை 
வாழும் கலையாக பாவிக்கவே... 
உதாரணங்களும்;
புராணங்களும்.
அதனை விடுத்து,
கட்டளையாக கற்பிக்க பட்டதாலும்- எச்சரிக்கையாக நமதெண்ணங்களால் 
நாம் கற்பித்துக்கொண்டதாலுமே,
இந்த
குழப்பம்.
ஆக,
இந்த குழப்பம் நீங்க 
நம் 
விழிப்புணர்வு பலம் கொள்ள... 
நான் 
பயன்படுத்தி...
பயன்பட்ட, 
வழி முறைகளில்... 
சில 
பிரகடனங்களை 
பிரார்த்தனைகளாக...
மிக எளிமையாக, 
நம்மனதளவில்...
அமைதியாக.
திரும்ப திரும்ப 
கூறும் பொழுது 
எல்லாம் மாறுவதை உணர்வீர்.
உணரும் பொழுது.. 
அதனை 
இயல்பாக்குவதை சிரமமின்றி பழக்குங்கள்.
சிரமம் என்றாலே...
அது,
நிச்சயம்  நமதியல்பில்லை. 
இதுவே...
இந்நிலையே



விழிப்புணர்வின் உச்சம்...thx 2 my lord.

என் ஆழ்மனதிற்கு விடை தெரியும்.அது இப்பொழுது எனக்குச் செயல்விடை அளிக்கிறது.
நான் அதற்கு நன்றி கூறுகிறேன்.ஏனெனில்,என் ஆழ்மனத்தின் அந்த முடிவில்லாத சக்தி, எல்லாவற்றையும் அறிந்துள்ளது.எனக்கான மிகச்சரியான விடையை அது எனக்கு வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறது.என் உறுதியான நம்பிக்கை இப்பொழுது என் ஆழ்மனத்தின் கம்பீரத்தையும் பெரும் புகழையும் விடுவிக்கிறது.இது இவ்வாறு இருப்பது குறித்து பேரின்பம் அடைகிறேன்.
எனக்கு இவ்விருப்பங்களைக் கொடுத்த அந்த முடிவில்லா சக்தி தலைமை தாங்கி, என்னை வழி நடத்திச் செல்கிறது.அதோடு என் விருப்பங்கள் நிறைவேறுவதற்க்கான மிகச்சரியான திட்டத்தையும் அது எனக்கு வெளிப்படுத்துகிறது.என் ஆழ் மனதின் ஆழ்ந்த ஞானம் இப்பொழுது செயல்விடையளிக்கிறது என்பதும்,நான் என் அக உலகில் உணர்ந்து,வேண்டும் பொருட்கள் புற உலகில் வெளிப்படுத்தப்படுகின்றன.என்பதும் எனக்கு தெரியும்
ஒரு சமன்நிலையும்,
நடுநிலையும் 
எல்லா இடங்களிலும் வியாபித்துள்ளன.


                                                                                                                        -ஜோசப்  மர்பி 


 பிரபஞ்சப் பேரறிவு எல்லா வகையிலும் தலைமையேற்று என்னை வழி நடத்திச்  செல்லுகிறது. சிறந்த ஆரோக்கியம் என்னுடையது:ஒத்திசைவு விதி என் மனதிலும் உடலிலும் இயங்குகிறது.அழகும்,அன்பும்,அமைதியும், செழிப்பும் என்னுடையவை.சரியான செயல்பாடு மற்றும் தெய்வீக ஒழுங்கு ஆகிய கொள்கைகள் என் வாழ்வு முழுவதையும் ஆட்சி செய்கின்றன.என்னுடைய முதன்மைக்கருத்து வாழ்வின் அழிவற்ற உண்மைகளைச் சார்ந்துள்ளது என்பதை நான் அறிவேன். 
என் சிந்தனையின் இயல்பிற்கேற்பவே என் ஆழ் மனம் செயல்படுகிறது என்பதை நான் அறிந்துள்ளேன்,உணர்ந்துள்ளேன்,நம்புகிறேன்.


                                                                                                                      நாகலட்சுமி சண்முகம்.
 

No comments:

Post a Comment