இங்குள்ள
எழுத்துக்களை
அதாவது
வார்த்தைக்காக இணைந்துள்ள எழுத்துக்களையும்...
வாக்கியங்களுக்காக
இணக்கமற சேர்ந்துள்ள
வார்த்தைகளையும்
உற்று நோக்குவோமாயின்
அதாவது
கூர்ந்து கவனிப்போமாயின்...
விளங்கும் அர்த்தம் வேறு-
விளங்க வேண்டிய அர்த்தம் வேறு
என
பொருள் பட புரியும்..
ஏதுமற்ற நிலையில்இருந்து நம்மை உருவாக்கி-உயர்த்தி,
உணர்வு தந்து
அவ்வுணர்வுக்கோர் ஓசை தந்து அவ்வோசைக்கு,
நல்லதோர் உவமை தந்து எழுத்துக்களாக எழுந்து நிற்கும்
இவ்வியக்கத்தகும் ஏற்பாட்டை உணர்ந்து..அதாவது பொறுப்புணர்ந்து...
எடுத்துக்காட்டாக
பொறுப்பெண்பது...
நான்-பிறந்தேன் -வளர்ந்தேன் ... வளர்த்துவிடப்பட்டேன்- வளர்த்த கடனுக்காக
உழைத்தேன்-சம்பாதித்தேன்...
செல்வமும்-உறவுகளும்
என நாளும்...
பிறந்தேன்-பின் பெற்றேன்...
வளர்ந்தேன் பின் வளர்விக்கப்பட்டேன்...
என் ஆணைக்குட்பட்டு நடக்க
சொன்னேன்.
பின் அர்த்தம் கூறி...
என் ஆசைக்கிணங்கி,
அடங்க சொன்னேன்..
பிரியம் என்றதற்க்கு
புது விளக்கமும் தந்தேன்...
என்பதல்ல பொறுப்பு
பொறுப்பு என்ன?,
என்பதை புரிந்து,
பொறுப்பாய் இருப்பது.
அதாவது
குறிப்பாக இன்னொன்று
குணாதிசயம் என்ற இந்த வார்த்தைக்குள் மறைந்துள்ள சத்தியம் அதாவது அர்த்தம்.
குணம்+அதிசயம்.
இந்த அர்த்தம் வேறு.
இதற்குள்
இருக்கும் தன்மை வேறு,
தன்மை அறிந்து - அர்த்தம் புரிவதே..
பொறுப்பு.
அதாவது,
தன்னை புரிவது...
இப்படி
ஒவ்வொரு வார்த்தைகளையும்
மேம்போக்காக
அதன் தன்மை
புரியாமல்-
வெற்று அர்த்தம்
புரிந்து..கொள்வதென்பது
நமக்காக
நாமே ஒரு அர்த்தம் கற்பித்து..
எழுத்துக்களை
கலங்க படுத்துவதேயாகும்
ஆதலால்....
அல்லது
பொறுமையுடன்...
பொறுப்புணர்ந்து
மீண்டும்
ஒரு முறை படிக்கவும்..
புது விளக்கம் கிடைத்து
புது பார்வை கொண்டு
புதியதோர் உலகம் காணலாம்
இது
இறை என்ற
அப்பேரியக்க
காந்த அலைகளின் மீது ஆணை.
ஈர்ப்புடன்
திரு.NMK.
r u feel 4 more/come 2 my visual space/nmkamalg.youtube.com/
nmkamalg@gmail.com


No comments:
Post a Comment